அம்மா..!!!

அம்மா..!
எனக்குள் உருகிக்கொண்டிருக்கும் எதுவோ ஒன்று…
இன்று கண்ணீர் வழி வெளிவந்ததோ…
ஒன்றும் குறையில்லையென கள்ளம்சொன்ன கண்கள்…
உற்று ஊடுருவி பார்த்து உண்மையுணர்ந்தாயோ…
உன்னை தவிர எனையறிய யாருண்டிங்கே…
காகிதமும் துளிமையும் தேவையில்லை…
என்னுருவம் எவ்வாறு பதித்தாயோ உள்ளே…
ஒற்றைக்கேசம் கலைந்தால்கூட…
ஒற்றியெடுத்து உருகுகிறாயே…
அம்மா..!!!