Preethi Rajkumar
- Book reviews
- April 19, 2023
Preethi Rajkumar
ரொம்ப நாளாவே எப்போ முகநூல் புத்தகத்துக்கு வந்தாலும் இந்த புத்தகத்தை படித்து அதன் அனுபவத்தை, விமர்சனங்களை, கருத்துக்களை யாரேனும் பதிவு செய்து படத்துக்கு trailer, teaser ரிலீஸ் பண்ணுற மாதிரி போட்டு நம்ம ஆர்வத்தை தூண்டுறாங்க அப்படி என்ன தான் எழுதிருக்கு அதுல இன்னைக்கு படித்தேயாகனும் என்று எண்ணி kindle பதிவிறக்கம் செய்து படித்து விட்டேன்.
எனது கல்லூரி நாட்களில் விடுதியில் தங்கி இருந்த போது அம்பா புத்தகத்தை ஒரே நாளில் படித்தது, அதன் பிறகு எந்த புத்தகத்தையும் இவ்வளவு ஆர்வமாகவும், ஈர்ப்புடனும் பிடித்து படித்ததில்லை. எதாவது இடைவெளி, இடையூறு என்று தடை வந்து சேரும்… இன்றும் சிறு தடங்கல் வந்த போதும் கவனம் சிதறாமல் படித்து முடித்து விட்ட எனது எண்ணங்களை, கருத்துக்களை பதிவு செய்யவே இப்பதிவு…
புத்தகத்தின் ஆசிரியரான எனது தோழிக்கு முதலில் என் பாராட்டும், வாழ்த்துக்களும்… முதல் பக்கத்தில் இருந்து, கடைசி பக்கம் வரை கதையில் திருப்பங்களும், சுவாரஸ்யமும் இருந்தது. கதை கற்பனை என்று சொன்னது ஏத்துக்க முடியவில்லை உண்மையான சம்பவங்களை நேரில் பார்த்தது போல் இருக்கிறது. கதை நாயகன் முதல் வில்லன் வரை அனைத்து கதாபாத்திரமும் அற்புதம்.
(Adventure movie patha madri irundhuchu. Jumanji 2 dhan yenaku niyabagam vandhadhu read panum podhu. Because na pathadhu adhu matum dhan)
மணிமேகலை, பூம்புகார், காதல், வரலாறு என்று புத்தகத்தை பற்றி நிறைய கருத்துக்கள் வந்து விட்டது. வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே மாற்றம் இல்லை. என்னை மிகவும் கவர்ந்தது ஆசிரியரின் கதை விவரிப்பும்,எழுத்து நடையும் தான். ஒரு சில புத்தகம் வசன நடையில் இருக்கும் அதை படிக்கும் போதே சலிப்படைந்து படத்தில் censor panra madri Idhukum panlame nu thonum. இதில் வார்த்தைகளும், வசனங்களும் censor செய்ய பட்டிருக்கிறது. அவ்வளவு அழகான சூழலையும் மிகவும் நேர்த்தியாக கன்னியமான எழுத்துக்களுடன் எழுதியது பிரமாதம். வரலாறு, புவியியல் என்று தொடங்கி அண்டம், ஆழ்கடலில் இறங்கி, நான் ஆர்வமுடன் படித்த சித்தர்களில் ஒருவரான கோரக்கர் சித்தர் வரை அனைத்தையுமே விரிவாக புரியும் படி கதை எடுத்துரைத்தது மிகவும் சிறப்பு.
பத்து வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் படித்த புத்தகமாகவும், kindle app ல், தொடு திரையில் படித்த முதல் புத்தகம் என்ற அனுபவத்தை, நினைவுகளை கொடுத்த தோழி பிரதி க்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். இன்னும் கதையில் இருந்து மீளவில்லை நினைவு அங்கே இருப்பதால் நிறைய சொல்ல நினைத்தாலும் எண்ணங்கள் வார்த்தைகளாக மறுக்கிறது. படங்களும் காட்சிக்கு மேலும் அழகு சேர்த்தது.
சரி Heroine ah pathachu. Hero yenga pa ஆள காணும். அந்த ஆதர்ஷ நாயகன கடைசி வரை கண்ணுல காட்டலையே நீ!!!
Yen prathi Indha madri character lam only imagination dhana!!!
#இந்திரநீலமும் #இமைக்காஇரவுகளும்
#உனது_அடுத்த_படைப்பை_எதிர்பார்த்து_காத்திருக்கும்_வாசகி