கவிஞர் சுரபி இராமச்சந்திரன்

கவிஞர் சுரபி இராமச்சந்திரன்

பிரதீபா சந்திரமோகன் எழுதிய ‘இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்’ என்ற வரலாற்றுப் புனைவுக் கதையை Kindle ல் படித்தேன். பொறியாளராகிய இந்த எழுத்தாளர் பழைய சோழர் தலைநகர் பூம்புகாரின் இடிபாடுகளிலிருந்து இக்கதையைக் கட்டி எழுப்பியுள்ளார். வரலாற்று ஆர்வமும் தேடலும் கொண்ட வாசகர்களுக்கு இந்நூல் நிச்சயம் பிடிக்கும்.

இந்திரநீலம் என்பது அமெதிஸ்ட் என்று சொல்லக் கூடிய ஒரு அரிய வகை ரத்தினக்கல். அதிசயிக்கத்தக்க ஆற்றல் கொண்டதாக நம்பப் படும் அக்கற்கள் ஆழிப் பேரலையால் விழுங்கப்பட்ட பண்டைய பூம்புகாரோடு கடலுக்கடியில் போய் விடுகின்றன. பேராசை கொண்ட கும்பல் அக்கற்களை காலங் காலமாய் தேடி அலைகின்றன. அப்படிப்பட்ட ஒரு கும்பலுக்கும் ஒரு தொல்லியல் ஆய்வுக் குழுவுக்கும் இடையே நடக்கிற திகிலும் திருப்பங்களும் கொண்ட கதை இது.

வாசகனை கடந்த காலத்துக்குள் மட்டுமல்ல, கடலுக்கடியிலும் அழைத்துச் சென்று பழைய பூம்புகாரின் மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம், நாளங்காடி, அல்லங்காடி போன்ற இடங்களையும், மணிமேகலை, உதயகுமாரன் போன்ற காப்பிய மாந்தர்களையும் சந்திக்க வைக்கிறது. துறவால் பட்டுப் போன மணிமேகலை உதயகுமாரன் காதலை மீண்டும் துளிர்க்க வைக்கிறது.

கதையெங்கும் இலக்கியம், வரலாறு, தொல்லியல், கடல்சார் அறிவியல் தொழில் நுட்பங்கள் குறித்த தகவல்களும் சான்றுகளும் விரவிக் கிடக்கின்றன. பஞ்சவாசம், நயினார் நோன்பு, நெடுங்கல் நின்ற மன்றம் என ஏராளமான விஷயங்களை தொட்டுச் செல்கிறது இந்நூல்.

எழுத்தாளரின் முதல் படைப்பு இது என்பதை நம்ப முடியவில்லை. எள்ளலும் துள்ளலும் கவித்துவமும் இழைந்தோடும் அழகிய மொழி நடையால் அலுப்பு சலிப்பில்லாத ஒரு ஆனந்தமான வாசிப்பு அனுபவத்தைப் பெற முடிகிறது. பூம்புகாரின் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இப்படைப்பின் நோக்கமும் படைப்பாளியின் ஏக்கமும்..


#இந்திரநீலமும் #இமைக்காஇரவுகளும்

Share :
comments powered by Disqus

Related Posts

எழுத்தாளர் பிரேம ராகவி விமர்சனம்

Video Review - இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் கடல் தாண்டி துபாய் மண்ணில் இந்திரநீலத்தின் ஒளிவீசச் செய்தமைக்கு மிக்க நன்றி.🥰

Read More

புத்தக வெளியீட்டு விழா

இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் - புத்தக வெளியீட்டு விழா இந்தப் பக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவின் முழு நிகழ்ச்சியையும், தனித்தனி பேச்சாளர்களின் உரைகளையும் காண்பித்துள்ளோம்.

Read More

அணிந்துரை - ச.தமிழ்ச்செல்வன்

பிரதீபா சந்திரமோகனின் “இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும்” என்கிற இந்நாவல் முற்றிலும் வித்தியாசமான ஒரு புதிய முயற்சி. வாசிக்கத் துவங்கினால் கீழே வைக்க முடியாமல் சரசரவென நகர்கிறது கதை.

Read More