பொறியாளர்.செள.ஸ்டாலின்பாரதி
- Book reviews
- April 19, 2023

Pratheba C Vignesh M.E.(Civil) அவர்கள் எழுதிய இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் வரலாற்றுப் புனைவு கதையை இணையம் மூலம் kindleல் படித்தேன்.
கதைகள் மூலம் நமது தமிழக வரலாற்றை தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதற்கு ஒரு நல்வாய்ப்பாக இந்த புத்தகம் இருந்தது. பூம்புகார் மற்றும் தமிழகம் பற்றிய தொல்லியல் தகவல்களை இந்த புத்தகம் மூலம் அறிய முடிந்தது. பூம்புகாரை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் நீண்ட நாளாக உண்டு. தற்போது அந்த ஆவல் மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
நிகழ்கால கதையோடு கடந்தகால மணிமேகலை கதையை இணைத்திருப்பது ஒரு சிறப்பான முயற்சி. வரலாறு, புவியியல், அறிவியல், இலக்கியம், காதல் என பன்முகப்பட்ட படைப்பாக இந்த புத்தகம் இருக்கிறது. மிகக் குறிப்பாக அறிவான விசயங்களை சொல்லும் நூலாகவும் உள்ளது.
பல்வேறு வேலைகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போதுதான் படிக்க முடிகிறது. கதையின் விறுவிறுப்பு சீக்கிரம் புத்தகத்தை படித்து முடிக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. சோர்வில்லாத அருமையான எழுத்து நடை. இந்த புத்தகம் எழுத்தாளரின் முதல் படைப்பு என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
நமது வரலாற்றை மக்களுக்கு சொல்ல வேண்டும் அதை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுத்தாளருக்கு இருப்பது தெரிகிறது. இந்த புத்தகத்தை பற்றி கூற பல நல்ல விசயங்கள் உள்ளது. இளம் வயது எழுத்தாளரான இவர் வருங்காலத்தில் நிச்சயம் சிறப்பான படைப்புகளை தந்து சிறந்த எழுத்தாளராக வருவார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. வாழ்த்துக்கள். வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் தவறாமல் படித்து பாருங்கள்.
நன்றி.
#இந்திரநீலமும்இமைக்காஇரவுகளும்