எழுத்து…
எழுத்து என்றும் முடிவதில்லை… சில கணங்களில் நான் எழுதுகிறேன்… பல பொழுதினில் அதுவே என்னை எழுதுகின்றது… கண்கள் மூடிக்கிடந்தாலும்… கனவுக்குள்ளேயும் வார்த்தை வாசனை… ஒவ்வோர் எழுத்தாய் ஒழுகி… துளி ஒன்றாய் ஆகுகையில்… எங்கிருந்தோ வந்தவோர் எண்ணம் அதைச் சிதறலாய் செய்கிறது…. மீண்டும் அது கசியத் தொடங்குகிறது… நானோ… கீழே விழுந்த சிதறல் துளிகளைத் தேடுகிறேன்… அடுத்தமுறை துளி திரள்கையில் சிதறடிப்பது… ஒருவேளை… இத்தேடல் தரப்போகும் பயனோ என்னவோ… இல்லை…. சற்று நிதானிக்கிறேன்…. இப்போது நான்… முழுமையாய் துளியில் கவனம் கொள்கிறேன்… வேறு எண்ணமின்றி நானும்… துளியோடே விழுகிறேன்… அது கரைகையில் நானும் தொலைகிறேன்… இப்போது நான் சிதறலில் தேடுவது… என்னை….