பட்டுக்கோட்டையில் தமுஎகச சார்பில் கலை இலக்கிய இரவு
பட்டுக்கோட்டை, ஜூன் 15, 2024: மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 95 -ஆவது பிறந்தநாள் விழா, 43-ஆவது கலை இலக்கிய இரவு ஆகியவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டை கிளையின் சார்பில், ஒற்றைச் செருப்புகள் சிறுகதை தொகுப்பு இரண்டாவது பதிப்பு வெளியீடு நடைபெற்றது. பாரதி புத்தகாலயம் முகமது சிராஜுதீன் நூலை வெளியிட்டார். எழுத்தாளர் சுமித்ரா சத்தியமூர்த்தி எழுதிய பயணம், எழுத்தாளர் பிரதிபா சந்திரமோகன் எழுதிய இந்திர நீலமும் இமைக்கா இரவுகளும் நூல் அறிமுகம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.தனபால் தலைமை வகித்தார்.
மண்ணின் புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை அறிமுகம் செய்தும்,நூலை பெற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத்தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரை ஆற்றியபோது “புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு கதைக்குள் நம்மை இழுத்து சென்றுவிடுகிறது எழுத்து நடை. இது தான் இவரது முதல் புத்தகம் என்று சொன்னால் நம்ப முடியவில்லை. ஆங்கில திரைப்படங்கள் போல அதிசயங்களுக்கு அறிவியல் கொண்டு விளக்கம் தருகிறார். கல்கி, சுஜாதா, Christopher Nolan என பலரின் எழுத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்ட கதை போல் தெரிகிறது.
மேலும் வளர, மேலும் பல நூல் படைக்க வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்