தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பட்டுக் கோட்டை கிளை, வாசல் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சார்பில், 3 நூல்கள் அறிமுகக் கூட் டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.
கவிஞர் ஆம்பல் காமராஜ் எழுதிய, ‘சகதிப் பூ’ நாவலை ஆசிரியர் இரா.இரஞ்சித், சுமித்திரா சத்தியமூர்த்தி எழுதிய, ‘ஆசை அகத்திணையா’ கவிதை தொகுப்பை மருத்துவர் வீரமணி, பிரதீபா சந்திரமோகன் எழுதிய, ‘இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்’ நாவலை தி.தனபால் ஆகியோர் திறனாய்வு செய்தனர். இந்நூல்களின் எழுத்தாளர்கள் ஏற்புரையாற்றினர்.