மார்க்கண்டேயருக்கு மணநாள்…

  • August 23, 2017
மார்க்கண்டேயருக்கு மணநாள்…

மார்க்கண்டேயருக்கு மணநாள்…

அகவை ஐம்பத்திமூன்றாம் அதனை காட்டாது தோற்றம்…

வெள்ளிவிழா வந்தது மணவாழ்வில் வெள்ளிநரை எழவில்லை சிகைதன்னில்…

மனமொத்த மனையாள் பெற்றமையால் மனத்தால் இன்னும் இரட்டையரே…

மண்ணில் எமை ஈன்று மக்கள் புகழ்கொண்டு மாநிலம் போற்ற வாழக்கற்றுத்தந்த மாண்புமிக்கோரே…

வேள்விகள் போல் கேள்விகளாயிரம் கேட்டாலும் வேடிக்கை குறையாமல் பதிலளிக்கும் பண்பு…

வேண்டாதவர்போல் பாவித்தாலும் வேகம் குறையாது அன்பு…

கண்டிக்காத அம்மாக்கள் உண்டா… கடல்லயே இல்லையாம்… 😛

வீட்டுப்பாடத்தோடு வாழ்க்கைப்பாடமும் வீணே செலவளிக்கா வினாடிநேரமும் விண்வெளி முதல் விட்டில்பூச்சி வரை விளக்கி வளர்த்த அம்மாக்கள்…

என் இல்லம்போல் எவர்க்கும் கிடைக்காது… என்னுள் எப்போதும் கர்வம்மிகும்… என் பிள்ளைக்கும் இதுபோல் சூழல் எழுதிக்கொடுக்க ஆர்வம்மிகும்…

இதைச்சொல்லி முடிக்க இன்றுகள் போதாது… இதைச்சொல்லி முடிக்கிறேன் இன்றைய பதிவை…

மார்க்கண்டேயருக்கு மணநாள் வாழ்த்துக்கள்…

Share :
comments powered by Disqus

Related Posts

நீயும் நானும்…

நீயும் நானும்…

Read More

இரக்கமில்லா உறக்கம்…..

இரக்கமில்லா உறக்கம்…..

Read More