கடவுளின் நாற்காலி - Adhiyaman Karthick R

  • December 29, 2023
கடவுளின் நாற்காலி

prathebascribbles

bookreview

மூன்றாண்டுகளாக வாசிப்பு அனுபவத்தில் விமர்சனம் எழுதியே ஆகவெண்டுமென்று எனை ஒரு நூல் உந்தித் தள்ளியிருக்கிறது.

இந்த புத்தகம் படித்த பிறகு நிச்சயம் விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றியது. எழுதத் தொடங்கிய பின் வேறு நிறைய பதிவிட்டுவிட்டென். இது வரைவிலேயே இருந்தது. இப்போது தான் முடிக்க நேரம் கிடைத்தது. இனி… விமர்சனம்…. ………

கடவுளின் நாற்காலி எனும் புதினம். Adhiyaman Karthick R அவர்கள் எழுதியது.

முதலில் எங்கோ மேற்கு தமிழகத்தில் தொடங்கி, கிழக்கு இந்தியா சென்று, தென்னாப்பிரிக்க மலைக்குச் சென்று என இரு துருவங்களையும் சுற்றிக்காட்டியுள்ளது இந்த கடவுளின் நாற்காலி.

சூழலியல் ஆர்வமுள்ள கேசவன், சிறுவயதில் ஒரு அரிதான பறவையினத்தைக் காண்கிறார். அதன் பின் பறவைகளைப் புரிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டு வன உயிர் ஆர்வலராக மாறி, அதற்காகவே வனவியல் பயின்று என வாழ்வையே மாற்றிய அந்த நாடோடி பறவைகளைத் தேடி அதன் வழியில் பயணப் படுகிறார்.

எப்போது அவை வந்து தரையிறங்கும் என்று காத்திருந்தபோது, அவர் கண்டதும் உணர்ந்ததும் அவரை உலுக்கிப்போட்டன.

ஆம். ஆமூர் பால்கன்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டன. அவற்றிற்கு பின் பெரும் பெரும் அரசியல்.

Zooming என்னும் விவசாய முறை தடை, சர்வதேச அரசியல், பறவைகளைக் கொன்றதால் சூழலியலில் ஏற்படும் மாற்றங்கள், எங்கோ ஆயிரம் மைல் தாண்டி விவசாயத்தை பாதிப்பது, பழங்குடிகள் எவ்வாறு நசுக்கப் படுகிறார்கள் என்பதனை எல்லாம் நெஞ்சைக் கிழிக்கும் வலியோடு பகிர்ந்திருக்கிறார்.

இதில் முக்கால்வாசி உண்மை சம்பவம் என்னும்போது நெஞ்சம் பதறுகிறது. மனிதனின் பேராசை தான் அழிவிற்குக் காரணம் என்பதை முகத்திலறைந்தார் போல் சொல்கிறது இந்நூல்.

இதில் பழங்குடி வாழ்வு முறை, புலம் பெயர்ந்த மக்களின் வேதனை, அனைத்தும் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனக்குச் சிறு ஏமாற்றம், பழந்தமிழ் நூல்கள் மற்றும் எழுத்துகள் பற்றி தொடங்கியவற்றை முழுமையாக முடிக்கவில்லையென்பது மட்டும் தான்.

ஒருவேளை அதன் தொடர்ச்சி வேறு நூலக வந்தால் நன்றாக இருக்கும் எனும் எண்ணமும் தோன்றியது.

A very good read. வாழ்த்துக்கள் சார் Adhiyaman Karthick R

நான் Amazon Kindle இல் படித்தேன். அச்சு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

Share :
comments powered by Disqus

Related Posts

ஆனந்த யாழ்...

அன்பெனும் மழையில் நம்மை அதிகம் நனைய வைப்பது எப்போதுமே பெற்றோர் தான். அவர்கள் அன்பிற்கு நாம் அவர்கள் மீது செலுத்தும் அன்பு என்றும் ஈடாகாது. இதை புரிந்துகொள்ள நமக்கு வாழ்நாள் முழுதும் அவகாசம் வேண்டும்.

Read More

எழுத்து…

எழுத்து…

Read More

தென்றல்….

எண்திசை மலர் சேர்ந்த பூந்தோட்டம்…. எல்லாம் மணமும் கலந்து வீசுது தென்றலாய்…

Read More