கவியொன்றெழுத எத்தனித்தேன்…

  • July 23, 2017
கவியொன்றெழுத எத்தனித்தேன்…

கவியொன்றெழுத எத்தனித்தேன்…

கவியொன்றெழுத எத்தனித்தேன்…
கருப்பொருள் பிடிக்க
காற்றில் வலைவிரித்தேன்…
ஒன்றும் சிக்கவில்லை…
சிக்கலில்லை…

வார்த்தெடுத்த வார்த்தைகளெடுத்து
வண்ணக் குமிழிக்குள் அடைத்து…
வானம்தொட பறக்கவிட எண்ணியே…
தேடலானேன் தேர்ந்த சொற்பதங்களை…
நேர்காணலில் நேர்மையைக் கைகொண்டேன்…

மலையென குவிந்த வார்த்தைகளில்…
மனம் தொட்டவை மட்டும் மதித்தழைத்தேன்…
மலர்போல் மாலைதொடுத்தேன்…
மனம் கவர்ந்த மணமொன்று பரவகாண்கிறேன்…
என் மகிழ்ச்சியைப் போலவே…

Share :
comments powered by Disqus

Related Posts

கவிதைகள் முடிவதில்லை

கவிதைகள் முடிவதில்லை

Read More

இரக்கமில்லா உறக்கம்…..

இரக்கமில்லா உறக்கம்…..

Read More