மனிதம்

வண்ணத்துப்பூச்சியின் இறகுவழிபயணித்த பனித்துளியே
நீயேதும் அதற்குவலிதந்திருப்பாய் என்றெண்ணிவசவுகள் வீசிட நினைக்கிறேன்
காற்றாலை கரத்தால்சிறகொடிந்த பறவைக்கும்கையறுநிலை பாடும் நான்…
என்வீட்டு மின்விசிறி முறித்ததும்பியின் இறகு வந்துமுகத்தில் அறைந்திடதலை குனிந்தேன்