தாயும் ஆனவர்…

  • April 5, 2016
தாயும் ஆனவர்

தாயும் ஆனவர்…

நடைபயில கற்றுத்தந்தாய் நீ எனக்கு…
என்னுள்ளே தமிழுக்கும் – அதனால்…
என் நடையில் உன் சாயல்… ஒவ்வொரு முறையும் உவக்கிறேன்…
உலகம் இதைச் சொல்லுகையில்…

என் நாவில் நெல் கொண்டு எழுத்திட்டு பேச்சுதந்த பேச்சியப்பன் நீ…
என் பேச்சும் உன்போலென… கேட்டும் நொடிகளில் பூரிக்கிறேன்…

தூரலோ… தூற்றலோ… கைக்குட்டை நனைத்த தருணங்களில் என் தொய்வு நீக்கி தோள்மீதேற்றி…
உலகம் உனக்குக் கீழென்று உணர்த்தினாய்…
திமிரென்று உணரப்படுவது யாதென்று விளக்கி…
அறிவென்ற திமிரொன்று எனக்களித்தாய்…

எழுத்தறிவித்தவன் இறைவன் எனில்… எந்தையே! நீயே என் இறைவன்…
என் உயிர்மெய் நீ தந்ததே…
உறவுகளும் கூட…
நீ தந்த எதிலும் மாற்றம் செய்ய மனமில்லை …
பெயரிலும் கூட…

-பிரதீபா

Share :
comments powered by Disqus